உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்திய நடிகரின் வாழ்க்கை சினிமா ஆகிறது

ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்திய நடிகரின் வாழ்க்கை சினிமா ஆகிறது

இப்போதெல்லாம் இந்திய நடிகர்கள் ஹாலிவுட் படங்களில் நடிப்பது சர்வசாதரணமாகி விட்டது. ஆனால் 1930களில் இதெல்லாம் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. காரணம் அன்று ஹாலிவுட் படங்களை முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மட்டுமே பார்த்தார்கள். பொது மக்கள் பார்வைக்கு வரவில்லை.

இப்படியான நிலையில் 1937ம் ஆண்டு எலிபண்ட் பாய் என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார் சாபு தஸ்தகீர். கர்நாடக மாநில் மைசூரை சேர்ந்தவர். சிறுவனாக இருந்தபோது யானை பாகனாக இருந்ததால் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இந்த படத்தின் மூலம் புகழ்பெற்ற அவர், அடுத்து 'தி ட்ரம்' (1938), 'தி தீப் ஆப் பாக்தாத்' (1940), 'ஜங்கிள் புக்' (1942), 'அரேபியன் நைட்ஸ்' (1942) உள்பட பல படங்களில் நடித்தார். 1948-ம் ஆண்டு 'சாங் ஆப் இந்தியா' என்ற படத்தில் நடித்த மர்லின் கூப்பர் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் அமெரிக்காவில் குடியேறிய இவர் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் அந்நாட்டின் விமானப்படையில் சேர்ந்து பணியாற்றினார். அவருடைய வீரம் மற்றும் துணிச்சலுக்காக விருதையும் பெற்றுள்ளார். 1963ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார்.

பலரும் அறியாத இவருடைய வாழ்க்கை தற்போது சினிமாவாகிறது. அல்மைட்டி மோஷன் பிக்சர்ஸ் இதனை தயாரிக்கிறது. இதற்கான உரிமத்தை சாபு தஸ்தகீரின் குடும்பத்திடம் இந்த நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது முதல்கட்ட பணிகள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !