மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
47 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
47 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
47 days ago
இந்தியாவின் முதல் பார்முலா 1 மோட்டார் பந்தய வீரரான கோயம்பத்தூரைச் சேர்ந்த நரேன் கார்த்திகேயன் பற்றிய பயோபிக் படம் உருவாக உள்ளது. தமிழில் உருவாக உள்ள இந்தப் படத்தை 'டேக் ஆப், மாலிக்' ஆகிய படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்க உள்ளார். 'சூரரைப் போற்று' படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதிய ஷாலினி உஷாதேவி இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதுகிறார்.
நரேனின் சிறு வயது முதல் அவரது படிப்படியான வளர்ச்சியைச் சொல்லும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்பட உள்ளதாம். இந்த பயோபிக் படம் குறித்து நரேன் கார்த்திகேயனும் அவரது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளாராம். 'என்கே 370' என்ற தற்காலிக தலைப்புடன் இந்தப் படத்தை ஆரம்பிக்க உள்ளார்கள்.
“நரேன் கார்த்திகேயன், பயணம் என்பது ரேஸிங் மட்டுமல்ல. அது நம்பிக்கையைப் பற்றியது. உங்களை நீங்களே, உங்கள் நாட்டைப் பற்றியும், மற்றும் வேறு யாராலும் காண முடியாத ஒரு கனவு. அதுதான் என்னை இந்த கதைக்குள் இழுத்து வந்தது,” என படம் பற்றி இயக்குனர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
47 days ago
47 days ago
47 days ago