மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
47 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
47 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
47 days ago
தமிழ் சினிமா உலகின் வசூல் இந்த வருடத்தில் இதுவரை பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை என்பதுதான் உண்மை. இந்த வருடத்தின் ஏழாவது மாதமும் இன்னும் பத்து நாட்களில் முடிய உள்ளது. நேற்று வரையில் 140 படங்கள் வரை வெளியாகிவிட்டன.
கடைசியாக சொல்லிக் கொள்ளும்படியான லாபத்தைக் கொடுத்த படம் என்றால் மே 1ம் தேதி வெளியான 'டூரிஸ்ட் பேமிலி'. அதற்குப் பிறகு கடந்த 80 நாட்களில் 60 படங்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் சூரி நாயகனாக நடித்த 'மாமன்' படம் மட்டும் 40 கோடி வசூலித்து ஓரளவிற்கு லாபத்தைக் கொடுத்த படமாக அமைந்தது.
“டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல், ஏஸ், தக் லைப், குபேரா,” ஆகிய படங்கள் ஓடும் என்று எதிர்பார்க்கப்பட்டு தோல்வியைத் தழுவின. '3 பிஎச் கே, பறந்து போ' ஆகிய படங்களுக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்தாலும் தியேட்டர் வசூல் என்பது லாபம் இல்லாத அளவில்தான் இருந்ததாகச் சொல்கிறார்கள். ஓடிடி, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றுடன் தயாரிப்பாளர் லாபம் பார்த்திருக்கலாம் என்பது தகவல்,.
நேற்று வெளியான படங்களுக்கான ரசிகர்கள் வருகை மிகவும் குறைவாகவே உள்ளதாம். 'டூரிஸ்ட் பேமிலி' தவிர்த்து 80 நாட்களில் வெளியான 60 படங்களில் ஒரே ஒரு படம் மட்டுமே குறைந்த லாபம் என்ற தமிழ் சினிமாவின் நிலை அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது என தியேட்டர் வட்டாரங்களில் கவலை கொள்கிறார்கள்.
பல சிங்கிள் தியேட்டர்களில் பல காட்சிகளை ரத்து செய்யும் நிலைதான் உள்ளதாம். மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் ஹாலிவுட் படங்கள், மற்ற மொழிப் படங்கள் என எதையோ ஓட்டி சமாளித்து வருகிறார்களாம். இப்படி ஒரு நிலை இந்த வருடத்தில் நடக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை என வருந்துகிறார்கள்.
அடுத்த வாரம் வெளியாக உள்ள 'தலைவன் தலைவி, மாரீசன்' அடுத்த மாதம் வெளியாக உள்ள 'கூலி' ஆகிய படங்கள் ரசிகர்களை மீண்டும் தியேட்டர்கள் பக்கம் அனைத்து காட்சிகளுக்கும் வர வைக்குமா என்ற ஆவலுடன் தியேட்டர்காரர்கள் காத்திருக்கிறார்கள்.
47 days ago
47 days ago
47 days ago