உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை

வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை

‛மோகமுள்' படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அபிஷேக். தமிழில் நடித்த படங்கள் குறைவு தான், ஆனால் சின்னத்திரையில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். குறிப்பாக கோலங்கள், செல்லமே போன்ற டிவி தொடர்கள் இவரை பிரபலப்படுத்தியது. தொடர்ந்து படங்கள், சீரியல்களில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் வெளியிட்ட வீடியோவில், ‛‛எனது போனுக்கு இ-சலான் ஒன்று வந்தது. நானும் ஏதோ டிராபிக் விதிமீறல் என்று நினைத்து பதட்டத்தில் அந்த லிங்க்கை கிளிக் செய்துவிட்டேன். பின்னர் எனது வாட்ஸ் அப் ஹேக் ஆகிவிட்டது. அதில் ஆந்திர போலீஸ் வாசகத்துடன் இடம் பெற்று இருந்தது. இதுபற்றி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தேன். இதுபோன்ற இ-சாலன் மூலம் மர்ம நபர்களால் ஹேக்கிங் முறைகேடு நடப்பதாக தெரிவித்தனர். ஆகவே இதுபோன்ற லிங்க் வந்தால் கவனமுடன் கையாளுங்கள்'' என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூடிய எச்சரிக்கையை அபிஷேக் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !