ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர்
ADDED : 190 days ago
தன், 50வது படத்தை முதலில் தயாரிப்பதாக சொன்ன உலக நடிகர், பின்னர் பின்வாங்கி விட்டதால், தானே அந்த படத்தை தயாரித்து நடித்துக் காட்டுவதாக கூறி வந்தார், வம்பு நடிகர். ஆனால், ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவரான அவரது தாடிக்கார தந்தைகுலம், 'இப்போது முதலீடு செய்தால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். அதனால், அவசரப்பட்டு படம் தயாரித்து, நஷ்டத்தை சந்திக்காதே...' என, வம்பு நடிகரை எச்சரித்தார்.
இதையடுத்து, 'என் படத்தை நானே தயாரித்து நடித்துக் காட்டுகிறேன்...' என, உலக நடிகரிடம் சவாலாக பேசி வந்த, வம்பு நடிகர், இப்போது சத்தம் இல்லாமல் அந்த படத்தை கிடப்பில் போட்டு விட்டார்.