மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
47 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
47 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
47 days ago
பச்சிளம் குழந்தையின் கண்கள், அழகே நின்று ரசிக்கும் பெண்மை மெல்லிய சிரிப்பால் சொக்க வைக்கும் முழுமதி முகம் உடையவள். தனது நடிப்பு திறமையால் வேற்று மொழிகளிலும் பிரபலமாகி இளைஞர்களை ரசிகர் பட்டாளமாக்கிய நடிகை சாயாதேவி நம்முடன் பகிர்ந்தது...
14வயது முதல் சினிமாவில் நடித்து வருகிறேன். கதாநாயகியாக அறிமுகமான 'கன்னிமாடம்' திரைப்படம் சினிமா வட்டாரத்தில் நல்ல பெயரை பெற்று கொடுத்தது. 'டி.எஸ்.பி.,' படத்தில் விஜய்சேதுபதியின் தங்கையாகவும், அடுத்ததாக 'சார்' படத்தில் கதாநாயகியாக நடித்தேன். தந்தை பிரபல இயக்குனர் (யார் கண்ணன்) என்பதாலும், தாய் நடன மாஸ்டர் (ஜீவா) என்பதாலும் சினிமா வாய்ப்பு சற்று எளிதாக கிடைத்தது.
ஆனால் முதல் முறையாக திரைப்படத்தில் நடித்த அனுபவம் நாளடைவில் காதலாக மாறி சினிமாவிற்காக அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. சினிமாவை பார்த்து வளர்ந்து இருந்தாலும் முதல் நாள் கேமரா முன்பு நிற்கும் போது பயம் கலந்த உணர்வு இருந்தது. இதை கடந்து தற்போது தொடர்ந்து கற்றுக்கொண்டே நடித்து வருகிறேன்.
அண்மையில் வெளியான 'பரமசிவன் பாத்திமா' திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் நடித்த பின்பு தான் எனக்கு அரசியல், மதம் குறித்த சரியான தெளிவு ஏற்பட்டது. இப்படத்தின் நோக்கம் மதம் சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தி யாரையும் கஷ்டப்படுத்துவதாக இல்லாமல் மதச்சார்பற்ற நாடு என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்படுத்துவதாக இருக்கும்.
இந்த படத்தில் விமல் கதாநாயகன் என்பது ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற போது தான் தெரியும். இவர் எப்போதும் கல்லுாரி நண்பரை போல நன்றாக பேசி உடன் இருப்பவர்களை சந்தோஷமாக வைத்திருப்பார் என்பதால் படப்பிடிப்பில் எல்லோரும் ஜாலியாகவே இருப்பார்கள்.
'மாமன்' திரைப்படத்தில் சூரியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன், அவருடன் நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தால் கதாபாத்திரம் குறித்து எதுவும் கேட்கவில்லை. படப்பிடிப்பு நேரத்தில் வைத்து தான் சூரியின் முன்னாள் காதலி கதாபாத்திரம் என்பதை கேட்டு தெரிந்து கொண்டேன். அவருக்காக கதாபாத்திரம் எதுவும் கேட்காமல் நடித்த திரைப்படம்.
6 வயதில் இருந்து 6 ஆண்டுகள் பரதநாட்டியமும், அதன் பின் கதகளியும் கற்றுக்கொண்டேன். பொதுவாக நடனம் நன்றாக தெரிந்த எந்த நடிகைகளுக்கும் திரைப்படத்தில் அதற்கான வாய்ப்புகள் வராது என கூறுவார்கள். ஆனால் என்னுடைய நடனத்திறமையை வெளிப்படுத்த சரியான பட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
கன்னிமாடம் திரைப்படத்தை பார்த்து நீங்கள் தான் கதைக்கு பொருத்தமாக இருப்பீர்கள் என்றும், கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று தெலுங்கு தயாரிப்பாளர், இயக்குனரின் விருப்பத்தால் ராம்பஜூலு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளேன்.
இப்படத்தின் படப்பிடிப்பில் மொழி தெரியாததால் வசனம், முகபாவனை குறித்து எதுவும் தெரியவில்லை. எனக்காக தமிழில் வசனங்களை ஆடியோவாக பதிவு செய்து ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்து, படக்குழுவினர் நன்றாக பார்த்துக்கொண்டனர். படப்பிடிப்பின் போது வசனங்களை பேசி நடித்ததால் நானே டப்பிங் செய்து வருகிறேன்.
நடிகை, நடனக்கலைஞர் ஷோபனாவுடன் ஒரு தடவையாவது நடிப்பு, நடனம் எதாவது ஒன்றில் இணைய வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை உள்ளது. பயணம் செய்வது மிகவும் பிடிக்கும், வரும் காலங்களில் உலக நாடுகளை சுற்றிப்பார்க்க விரும்புகிறேன். அதில் ஆன்மிகம் குறித்த தேடல் அதிகமாக இருக்கும்.
நமக்கு எவ்வளவு பிரச்னை இருந்தாலும் தொடர்ந்து உழைத்து, கற்றுக்கொண்டே இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கடைசி மூச்சு வரை சினிமாவில் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
முதல் முறையாக திரைப்படத்தில் நடித்த அனுபவம் நாளடைவில் காதலாக மாறி சினிமாவிற்காக அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.
47 days ago
47 days ago
47 days ago