43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்!
ADDED : 140 days ago
விஜய் நடித்த ‛தமிழன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. அதன்பிறகு பாலிவுட்டில் முன்னணி நடிகையாகி விட்டார். திருமணத்திற்கு பிறகு ஹாலிவுட் சினிமா மற்றும் வெப்சீரியல்களில் பிசியாக நடித்திருக்கிறார். தற்போது ராஜமவுலி இயக்கி வரும் புதிய படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 18ம் தேதி தன்னுடைய 43வது பிறந்த நாளை கணவர் நிக் ஜோனஸ், மகள் மாட்டி மேரியுடன் கொண்டாடியுள்ளார் பிரியங்கா. அதையடுத்து பிகினி உடையில் கடற்கரையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருக்கிறார். அதோடு தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள பிரியங்கா சோப்ரா, உங்கள் வாழ்த்துக்களால் எனது இதயம் நிரம்பி உள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.