மேலும் செய்திகள்
இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி'
47 days ago
செப்டம்பர் 12ல் 8 படங்கள் ரிலீஸ்
47 days ago
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து வெளிவந்த தெலுங்குப் படம் 'ஆர்ஆர்ஆர்'. அப்படத்தில் கீரவாணி இசையில், ராகுல் சிப்லிகுன்ச் பாடிய 'நாட்டு நாட்டு' பாடல் அந்த ஆண்டிற்கான சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது பெற்றது.
தெலுங்கு சினிமா பாடல் ஒன்று ஆஸ்கர் விருது பெற்றதை அத்திரையுலகினர் கொண்டாடினார். ஆனால், அப்போது இருந்த அரசு அந்த விருதைப் பெற்றவர்களை கவுரவிக்கவில்லை. அந்த சமயத்தில் எதிர்க்கட்சியாக இருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்தார். அதோடு காங்கிரஸ் பதவிக்கு வந்தால் அவருக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும என்று அறிவித்தார்.
இருந்தாலும் அது பற்றி எந்த அறிவிப்பும் வராமல் இருந்தது. இதனிடையே, சமீபத்தில் தெலுங்கு சினிமாவுக்கான 'கட்டார் விருதுகள்' வழங்கும் விழாவில் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு துணை முதல்வரை கேட்டுக் கொண்டார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போனலு திருவிழா நிகழ்வில் ஆந்திர முதல்வர் ரேவந்த் ரெட்டி, பாடகர் ராகுலுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். நிறைய இளைஞர்களுக்கு அவர் முன்னுதாரணமாக இருக்கிறார் என்றும் பாராட்டியுள்ளார்.
47 days ago
47 days ago