ஹன்சிகாவுடன் பிரிவா ? அவரது கணவர் பதில்…
ADDED : 137 days ago
தமிழ், தெலுங்கு சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஹன்சிகா. தற்போது தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். அவருக்கும் சோஹைல் கட்டுரியா என்பவருக்கும் 2022ல் திருமணம் நடந்தது. ஹன்சிகாவின் நெருங்கிய தோழியின் கணவராக இருந்தவர் தான் சோஹைல். அவர்கள் பிரிந்த பிறகு சோஹைலை ஹன்சிகா திருமணம் செய்து கொண்டார்.
கடந்த சில நாட்களாக ஹன்சிகா அவரது கணவர் சோஹைலை விட்டுப் பிரிந்து வசித்து வருகிறார் என செய்திகள் வெளிவந்தன. இது குறித்து விசாரிக்க மும்பை மீடியாக்கள் அவர்களைத் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், ஹன்சிகா தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லையாம். அதே சமயம், அவரது கணவர் சோஹைல், 'அது உண்மையில்லை' என்ற பதிலளித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளார்கள்.