உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : கணவர் இயக்கிய அத்தனை படங்களையும் தயாரித்த கண்ணாம்பா

பிளாஷ்பேக் : கணவர் இயக்கிய அத்தனை படங்களையும் தயாரித்த கண்ணாம்பா

பழம்பெரும் நடிகை கண்ணாம்பாவின் கணவர் கே.பி.நாகபூஷ்ணம், இவர் நாடக ஒருங்கிணைப்பாளராக இருந்தார். கண்ணாம்பா நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போதே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதாவது இருவரும் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே இல்லறத்தில் இணைந்தனர்.

பின்னாளில் கண்ணாம்பா நடிகையாக உயர்ந்தார். நாகபூஷ்ணம் இயக்குனர் ஆனார். கணவரின் படங்களை தயாரிப்பதற்காக ஸ்ரீராஜேஷ்வரி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி கணவர் இயக்கிய படங்களை தயாரித்தார் கண்ணாம்பா.

தமிழில் ஹரிச்சந்த்ரா, துளசி ஜலந்தர், நவஜீவனம், சவுதாமினி, ஏழை உழவன், லட்சுமி, நாக பஞ்சமி, சதி சாவித்ரி, தக்ஷாயணம், தாலி பாக்கியம் படங்களை தயாரித்தார். ஏராளமான தெலுங்கு படங்களையும் தயாரித்தார்.

திரைப்படத் தயாரிப்பால் பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்த கண்ணாம்பா கடைசி காலத்தில் பொருளாதாரத்திற்கு சிரமமான ஒரு வாழ்க்கையையே வாழ்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !