பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர்
ADDED : 83 days ago
1980களில் காதல் படங்கள் வரிசை கட்டி வந்த காலத்தில் வெளிவந்த படம் 'ஜனனி'. இதனை ஜெமினி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. நேதாஜி இயக்கி இருந்தார். இந்த படத்தில் கன்னட நடிகை பாவ்யா டைட்டில் கேரக்டரில் அதாவது ஜனனியாக நடித்திருந்தார். அவரது ஜோடியாக மேற்கு வங்காளத்தை சேர்ந்த உதயகுமார் நடித்தார். அங்கு அறிமுகமாகி சில படங்கள் நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் நடித்தார். அதன் பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இதற்கு காரணம் ஜனனி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
நாயகனும், நாயகியும் கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் போட்டியிட்டு மோதி, பின்னர் காதலித்து, பிரிந்து, பின்னர் காதலிக்காக காதலன் வேறு விதம் ஒன்றில் தியாகம் செய்வதாக படத்தின் கதை அமைந்திருந்தது. இதே மாதிரியான கதை அமைப்புடன் பல படங்கள் அப்போது வெளிவந்திருந்ததும் படத்தின் தோல்விக்கு காரணம்.