சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: போஸ் வெளியே, ஆர்த்தி உள்ளே
ADDED : 69 days ago
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது. இதில் போஸ் வெங்கட், தினேஷ், பரத் ஆகியோர் 3 அணிகளாக போட்டியிடுகிறார்கள். இவர்கள் தவிர நடிகை ஆர்த்தி கணேஷ் தனியாக தலைவர் பதவிக்கு மட்டும் போட்டியிடுகிறார்.
தற்போது சங்கத்தின் செயலாளராக இருக்கும் போஸ் வெங்கட் மீண்டும் அதே பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், போஸ் வெங்கட் போட்டியிடும் செயலாளர் பதவிக்கு பரத் அணி சார்பாக நவீந்தர் போட்டியிடுகிறார். போஸ் போட்டியில் இருந்து விலகி உள்ளார். போஸ், ரவீந்தர் இருவருமே ஆளும் கட்சி அனுதாபிகள் என்பதால் இருவரில் ஒருவர் விலகி கொள்ளுமாறு வந்த உத்தரவால் போஸ் விலகியதாக கூறப்படுகிறது. கடைசி நிமிடத்தில் போஸ் வெங்கட்டுக்குப் பதிலாக நடிகை நிரோஷா செயலாளர் பதவிக்கு மனு செய்துள்ளார்.