உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி..

ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி..

2025ம் ஆண்டின் 7 மாதங்கள் அடுத்த சில நாட்களில் முடியப் போகிறது. இந்த 7 மாதங்களில் தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் எண்ணிக்கை 150ஐ நெருங்கிவிட்டது. அடுத்த 5 மாதங்களில் குறைந்த பட்சம் 75 படங்களாவது வெளியாகும். அதனால், இந்த ஆண்டும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 200ஐக் கடந்துவிடும்.

அடுத்த 5 மாதங்களில் சில பெரிய படங்கள் வெளியாக உள்ளது. முதலில் ஆகஸ்ட் 14ம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி', படம் வெளியாக உள்ளது. அதற்கடுத்து மேலும் சில பெரிய படங்களும், எதிர்பார்க்கப்படும் சில முக்கிய படங்களும் வர உள்ளது. ஆகஸ்ட் 14ம் தேதி 'கூலி' படம் வெளியாக உள்ளதால், அதற்கு முன்பும், பின்பும் ஒரு வாரத்திற்கு வேறு படங்கள் வெளியாக வாய்ப்பில்லை. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் அப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால், ஆகஸ்ட் 1ம் தேதி பல படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். “அக்யூஸ்ட், போகி, பிளாக்மெயில், ஹவுஸ்மேட்ஸ், முதல் பக்கம், சரண்டர், உசுரே,” ஆகிய படங்களின் வெளியீடு பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மேலும் சில படங்கள் சேரும் என்று தெரிகிறது. இதற்கு முன்பும் சில வாரங்களில் இப்படி ஒரே நாளில் நிறைய படங்கள் வெளியாகின. இதனால், மிகக் குறைந்த தியேட்டர்களே அப்படங்களுக்குக் கிடைத்தன. இந்த வெளியீட்டு சிக்கல் தமிழ் சினிமாவில் இன்னும் தீர்த்து வைக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !