மேலும் செய்திகள்
நடிகர் ரோபோ சங்கர் காலமானார்
53 days ago
தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2
53 days ago
பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்டலாவை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். தற்போது கிரிஸ்டலா, 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறார்.
மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். அடுத்து ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவர் பிரபல சமையல் கலைஞர் என்பதால் இவரது சமையல்கள் மிகவும் பிரபலம். குறிப்பாக திரைப்பிரபலங்கள் மற்றும் விஐபி வீட்டு விஷேங்களில் இவரது சமையல் தான் மணக்கிறது. இதுதவிர ‛குக் வித்' மோகாளி நிகழ்ச்சியில் மூன்று நடுவர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.
ரங்கராஜிற்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு பிள்ளைகள் இருக்கின்றனர். சமீபகாலமாக ஸ்ருதியை ரங்கராஜ் பிரிந்து வாழ்வதாக செய்தி வந்தது. இதற்கிடையே காதலர் தினத்தன்று, ஜாய் கிரிஸ்டலா தனது வலைதளத்தில் 'மை மேன்' என்று குறிப்பிட்டு ரங்கராஜ் பெயரை தன் பெயருடன் சேர்த்து பதிவிட்டார். இதற்கு ஸ்ருதி, ‛நானே அவரது மனைவி' என குறிப்பிட்டார். இந்த விஷயம் அப்போது சர்ச்சையானது.
இந்நிலையில் ஜாய் கிரிஸ்டலா, திடீரென அவரது இன்ஸ்டா பக்கத்தில் ரங்கராஜ் உடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு போட்டோவில் கிறிஸ்டலாவின் நெற்றியில் ரங்கராஜ் திலகமிடுவது போன்ற போட்டோவையும் வெளியிட்டுள்ளார். எனவே இவர்களுக்கு திருமணம் ஆகி உள்ளது உறுதியாகி உள்ளது.
ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸ்டலாவுக்கும் இது இரண்டாவது திருமணம். ‛பொன்மகள் வந்தாள்' பட இயக்குநர் ஜே.ஜே. பெட்ரிக்கை 2018ல் திருமணம் செய்து பின்னர் அவரை பிரிந்துவிட்டார்.
53 days ago
53 days ago