உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோவிலில் தீ மிதித்த புகழ்

கோவிலில் தீ மிதித்த புகழ்

ஆடி மாதம் என்பதால் அம்மன் கோவில்கள் பலவற்றிலும் திருவிழா நடக்கும். கூழ் ஊற்றுதல், தீ மிதித்தல் போன்றவன்றில் அம்மன் பக்தர்கள் ஈடுபடுவார்கள். நடிகரும், டிவி பிரபலமுமான புகழ், கடலூரை சொந்த ஊராகக் கொண்டவர். அங்குள்ள அம்மன் கோவிலில் நடைபெற்ற ஆடி மாதத் திருவிழாவில் கலந்து கொண்டு தீ மிதித்துள்ளார்.

அந்த வீடியோவைப் பகிர்ந்து, “ஆண்டவா எல்லாரும் எப்பவும் மன நிம்மதியோட, எந்த தொந்தரவும் இல்லாம சந்தோஷமா இருக்கனும்,” எனப் பதிவிட்டுள்ளார். அவரது பதிவிற்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக்குகளைப் பதிவிட்டுள்ளனர்.

புகழ் கதாநாயகனாக நடித்துள்ள 'மிஸ்டர் ஜு கீப்பர்' படம் இந்த வாரம் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !