நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி
ADDED : 63 days ago
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராதிகா சரத்குமார். 45 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார். தற்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருவதோடு சின்னத்திரை டிவி சீரியல்களும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு டெங்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து ஐந்து நாட்கள் அவர் சிகிச்சை பெற உள்ளதாகவும், அதன் பின்னர் அவர் வீடு திரும்பவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.