உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது

மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது

மோசடி வழக்கில் காமெடி நடிகர் டாக்டர் சீனிவாசன் டில்லியில் கைது செய்யப்பட்டார்.

அக்குபஞ்சர் டாக்டரான சீனிவாசன், ‛லத்திகா' என்ற படத்தின் மூலம் நடிகரானார். தொடர்ந்து ‛கண்ணா லட்டு தின்ன ஆசையா' உள்ளிட்ட படங்களில் காமெடி ரோல்களில் நடித்தார். தனக்கு தானே ‛பவர்ஸ்டார்' என பட்டம் சூட்டிக் கொண்டு சினிமாவில் அந்த பெயரில் வலம் வந்தார்.

டில்லியில் தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.1000 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.5 கோடி பணம் பெற்றுள்ளார். ஆனால் கடன் பெற்று தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. மோசடி செய்யப்பட்ட பணத்தை திரைப்பட தொடர்பாக செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றவாளியாக இருமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் முறையாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளார் சீனிவாசன். இந்நிலையில் டில்லியில் வைத்து சீனிவாசனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சீனிவாசன் மீது நிறைய மோசடி வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாக ஏற்கனவே இவர் சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !