மேலும் செய்திகள்
நடிகர் ரோபோ சங்கர் காலமானார்
49 days ago
தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2
49 days ago
அந்தக் காலத்தில் இசை அமைப்பாளர்கள் நடிப்பது புதிதில்லை. ஜி.ராமநாதன், எம்.எஸ்.விஸ்வநாதன், கங்கை அமரன், சங்கர் கணேஷ் உள்பட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த காலத்தில்கூட விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார்கள். ஆனால் இளையராஜா முழுமையாக சினிமாவில் நடிக்கவில்லை. அபூர்வமாக ஒரு சில படங்களில் அவர் இளையராஜாவாகவே தோன்றி இருப்பார்.
ஆனால் ராமராஜன் நடித்த 'வில்லுப்பாட்டுக்காரன்' படத்தில் ஒரு காட்சியில் வசனம் பேசி நடித்துள்ளார். கதைப்படி வில்லுப்பாட்டு கலைஞரான ராமராஜன் தனது ஊரில் உள்ள கோவில் ஒன்றை புதுபிப்பதற்காக நிதி திரட்டுவார். அப்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இளையராஜா கணிசமான தொகை நிதியாக கொடுத்திருந்த நேரம் என்பதால் சென்னை வந்து அவரிடம் நிதி கேட்க செல்வார்கள்.
பிரசாத் லேப்பில் உள்ள அவரது ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் அவரை சந்திக்க முயற்சிப்பார்கள் அப்போது கங்கை அமரனை, இளையராஜா என்று நினைத்து அவரிடம் நிதி கேட்டுக் கொண்டிருக்கும்போது இளையராஜா அலுவலகத்தில் இருந்து வெளியே வருவார்கள். அவர் காலில் விழுந்து வணங்கி நிதி கேட்பார்கள்.
அப்போது இளையராஜா 'அந்த கோவில் பற்றி எனக்கு தெரியும், நல்லபடியாக செய்யுங்கள், கோவில் சமாச்சாரமெல்லாம் தம்பி பார்க்குறான். நீங்க அவனை பார்த்துவிட்டு போங்க' என்று வசனம் பேசி விட்டுச் செல்வார்.
பின்னர் அவர்கள் கங்கை அமரனை சந்திப்பார்கள். அவர் கோவில் நிதிக்காக செக்கை கொடுப்பார். 'இளையராஜா மாதிரி தாடி வச்சிட்டா அவராகிட முடியுமா?' என்று செந்தில் அவரை கிண்டல் செய்வார். இந்த காட்சியில் ராஜ்கிரண் ஓரமாக நின்று கொண்டிருப்பார்.
49 days ago
49 days ago