ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம்
ADDED : 113 days ago
பாலிவுட்டை தாண்டி தென்னிந்தியாவிலும் ரசிகர்களிடம் மிக வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ். தமிழில் கமல், தெலுங்கில் நாகார்ஜுனா, கன்னடத்தில் சுதீப் மற்றும் மலையாளத்தில் மோகன்லால் என இந்த நிகழ்ச்சி அந்தந்த மொழிகளில் துவங்கப்பட்ட நாளிலிருந்து இந்த பிரபலங்கள் சுவாரசியமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். தமிழில் மட்டும் கடந்த வருடம் கமலுக்கு பதிலாக விஜய்சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார்.
இந்த நிலையில் மலையாள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளை, ஆகஸ்ட் 3ம் தேதி ஞாயிறன்று துவக்க விழா நிகழ்ச்சியுடன் துவங்க இருக்கிறது. மோகன்லால் வழக்கம் போல இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ஆசியாநெட் சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறது.