உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'!

எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'!


யுடியூப்பில் பிரான்க் ஷோ மூலம் பிரபலமானவர் பிரான்க் ஸ்டார் ராகுல். அதன் பிறகு ‛பிரின்ஸ், சிவகுமாரின் சபதம், வேலன்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார் ராகுல்.

சமீபத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். புவனேஷ் சின்னசாமி என்பவர் தயாரிப்பில் பிரான்க் ஸ்டார் ராகுல் தனது முதல் படத்தை இயக்குகிறார். இதில் எம்.எஸ். பாஸ்கர், ஸ்ரீநாத் உள்ளிட்ட நடிகர்கள் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என சமீபத்தில் அறிவித்தனர்.

தற்போது எம்.எஸ். பாஸ்கர் தேசிய விருதை வென்றதை முன்னிட்டு இந்த படத்திற்கு 'கிராண்ட் பாதர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !