மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
59 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
59 days ago
தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் படப்பிடிப்புகள் நடைபெறாது என தெலுங்குத் திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் நேற்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். கூட்டமைப்பின் பொதுக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இன்று ஆகஸ்ட் 4 முதல் 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தயாரிப்பாளர்களிடமிருந்து உறுதிப்படுத்தல் கடிதம் பெற்றவர்களுக்கு மட்டுமே கூட்டமைப்பு மூலம் தொழிற்சங்கங்களுக்கு தெரிவிக்கப்பட்ட பிறகு பணிக்குச் செல்ல வேண்டும். அதுவரை, தெலுங்கு திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் யாரும், திரைப்படம் அல்லது வெப் சீரிஸ் படப்பிடிப்புகளுக்கு, கூட்டமைப்பின் அனுமதி இல்லாமல் எந்தவித பணிகளுக்கும் தொழிற்சங்க/சங்க உறுப்பினர்கள் செல்லக்கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகள் தெலுங்கு திரைப்படங்கள் எங்கு நடந்தாலும் பொருந்தும். மற்ற மொழி திரைப்படங்களுக்கும் இது பொருந்தும், என அவர்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
தெலுங்கு திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பில் மொத்தம் 24 தொழிற்சங்கங்கள் உள்ளன. தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் படப்பிடிப்புகளைத் தொடரும் விதத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. விரைவில் இது குறித்து ஏதாவது சுமூக முடிவு எட்டப்படலாம்.
59 days ago
59 days ago