உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா!

முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா!


தெலுங்கில் 'நின்னு கோரி, மஜிலி, குஷி' போன்ற படங்களை இயக்கியவர் சிவா நிர்வாணா. சமீபகாலமாக இவரின் அடுத்த படத்தில் கதாநாயகனாக ரவி தேஜா நடிக்கவுள்ளார் என தகவல் பரவியது.

இதைத்தொடர்ந்து சிவா நிர்வாணா, ரவி தேஜா கூட்டணியில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக சமந்தா இணைகிறார் என்கிறார்கள். இதன் மூலம் சமந்தா முதல் முறையாக ரவி தேஜா உடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஆக காந்தாரா படத்தின் மூலம் பிரபலமான அஜனேஷ் லோகேஷ் என்பவர் இசையமைப்பதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !