'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல்
ADDED : 106 days ago
ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ள படம் 'கூலி'. இப்படத்தின் அமெரிக்க பிரீமியர் காட்சிகளுக்கான முன்பதிவு கடந்த வாரமே ஆரம்பமானது. வழக்கம் போல ரஜினி ரசிகர்கள் முன்பதிவில் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். அதனால், இப்போதே 1 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலை அந்தப் படம் கடந்துள்ளது. இன்னும் பத்து நாட்கள் உள்ள நிலையில் கூடுதல் முன்பதிவும் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 2025ம் வருடத்தில் அமெரிக்காவில் தமிழ்ப் படங்களின் வசூல் பெரிய அளவில் நிகழவில்லை. எதிர்பார்க்கப்பட்ட சில படங்களும் மிகக் குறைவான வசூலையே கொடுத்துள்ளன. அந்தக் குறையை 'கூலி' படத்தின் வசூல் தீர்த்து வைக்கும் என்று தெரிகிறது.