வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான்
ADDED : 58 days ago
சமீபத்தில் 2023 - 2024ம் வருடத்திற்கான 71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.. அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதன்முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். அட்லி இயக்கத்தில் இவர் நடித்த 'ஜவான்' திரைப்படம் மூலமாக இவருக்கு இந்த தேசிய விருது கிடைத்துள்ளது.
இந்த நிலையில் மலையாள திரையுலகிற்கு தேசிய விருது பெற்றுத்தந்த நடிகை ஊர்வசி, நடிகர் விஜயராகவன் ஆகியோருக்கு வாழ்த்து சொன்ன மோகன்லால், தேசிய விருது பெற்ற ஷாருக்கான் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கும் தனது வாழ்த்துகளை சோசியல் மீடியா பக்கம் மூலமாக தெரிவித்து இருந்தார். இதற்கு 'தேங்க்யூ மோகன்லால் சார் நன்றி' என்று சொன்ன ஷாருக்கான் 'ஒரு மாலை நேரத்தில் உங்களை சந்தித்து பேசி ஆரத்தழுவ முடியுமா' என அவரிடம் தன் விருப்பத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.