உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம்

90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம்

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம். 1950 முதல் 1960களின் இறுதி வரை முன்னணி நடிகையாக இருந்தவர். ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, புதையல், தங்கப்பதுமை, நாடோடி மன்னன், பாசமலர், தாலி பாக்கியம், அலிபாபாவும் 40 திருடர்களும், அரங்கேற்றம் போன்றவை அவர் நடித்த முக்கியமான படங்களில் சில. 200 படங்கள் வரை நடித்திருக்கிறார். பெரும்பாலும் குணசித்ர வேடங்களில் நடித்தார். தற்போது அடையாறில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவரது 90வது பிறந்தநாளை அவரது குடும்பத்தினர் எளிமையாக கொண்டாடினார்கள். மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளு பேரன், பேத்திகள் இதில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !