உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'?

'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'?


தமிழ் சினிமாவில் திடீரென சில வித்தியாசமான கதைகளைக் கொண்ட படங்கள் வரும். எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என நாம் நினைத்து அப்படங்களைப் பற்றி சிலாகித்துப் பேசிப் பாராட்டுவோம். ஆனால், கொஞ்ச நாட்களுக்குப் பிறகுதான் அவை எந்தப் படத்தின் காப்பி என்பது தெரிய வந்து அதிர்ச்சி அடைவோம். அப்படி ஒரு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது கடந்த வாரம் வெளியான 'ஹவுஸ்மேட்ஸ்'.

2012 மற்றும் 2022 ஆகிய காலகட்டங்களில் ஒரே வீட்டில் நடக்கும் கதையாக சூப்பர் நேச்சுரல் பேன்டஸி படமாக இந்தப் படத்தின் கதை இருந்தது. இப்படத்திற்கு ஓரளவு நல்ல விமர்சனங்கள்தான் கிடைத்தது. ஆனால் படம் வெளியான ஒரு வாரத்திற்குள்ளாக அது எந்தப் படத்தின் காப்பி என்பதை சமூக வலைதளங்களில் கண்டுபிடித்து வெளியிட்டுவிட்டார்கள்.

2011ம் ஆண்டு வெளிவந்த பிரிட்டிஷ் படமான 'த காலர்' என்ற படத்தின் கதையைத் தழுவி கொஞ்சம் மாற்றி 'ஹவுஸ்மேட்ஸ்' கதையை உருவாக்கி இருக்கிறார்கள். 1979 மற்றும் 2011ல் ஒரே வீட்டில் நடக்கும் கதையாக 'த காலர்' படத்தின் கதை உள்ளது.

அந்தப் படத்தை 2020ல் 'த கால்' என்ற பெயரில் கொரியன் மொழியில் ரீமேக் செய்துள்ளார்கள். அவர்கள் 1999 மற்றும் 2019 கால கட்டங்களில் நடக்கும் கதையாக கொஞ்சம் மாற்றி இருக்கிறார்கள்.

இன்றைய ஓடிடி யுகத்தில் உலக மொழிப் படங்களைத் தேடித் தேடிப் பார்க்கிறார்கள் ரசிகர்கள். அதனால், காப்பி, தழுவல், இன்ஸ்பிரேஷன் என்பதில் இயக்குனர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !