உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2'

3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2'


அயன் முகர்ஜி இயக்கத்தில், ப்ரிதம் இசையமைப்பில், ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்டிஆர், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'வார் 2' படம் ஆகஸ்ட் 14ம் தேதி ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் தணிக்கை முடிந்து 'யு-ஏ 16 +' சான்றிதழைக் கொடுத்துள்ளார்கள். 16 வயதுக்குக் கீழுள்ளவர்கள் பெற்றோர் வழிகாட்டுதலுடன் இந்தப் படத்தைப் பார்க்கலாம். படத்தின் நீளம் 3 மணி நேரம் 2 நிமிடங்கள் ஓட உள்ளது.

பொதுவாக பிரம்மாண்ட ஹிந்திப் படங்களின் நீளம் 3 மணி நேரம் இருப்பது வழக்கம். அதற்கு இந்தப் படமும் விதிவிலக்கல்ல. அன்றைய தினம் வெளியாகும் தமிழ்ப் படமான 'கூலி' படம் 2 மணி நேரம் 49 நிமிடம் ஓடும் அளவில் 'ஏ' சான்றிதழைப் பெற்றுள்ளது. இதனால், 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க முடியாது.

'வார் 2' படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் என்பதால் அந்தப் படத்திற்கு சிறுவர், சிறுமியர் பெற்றோருடன் வரலாம். ஆனால், 'கூலி' படத்திற்கு அப்படி வந்து பார்க்க முடியாது. இதனால், 'கூலி' படத்தின் வசூல் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !