அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர்
ADDED : 58 days ago
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நடிகைகள் நிதி அகர்வால், லட்சுமி மஞ்சு, பிரணிதா சுபாஷ், அனன்யா நாகல்லா உள்ளிட்டோர் 29பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த 29 பேரும் அமலாக்கத்துறை முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரகாஷ்ராஜ் அமலாகத்துறை முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில் ஆஜராக வேண்டிய மற்ற நடிகர், நடிகைகள் ஆஜராவதற்கு கால அவகாசம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.