மேலும் செய்திகள்
ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள்
53 days ago
250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி'
53 days ago
அடிப்படையில் மலையாளியான வாசுதேவன் மலேசியாவில் பிறந்து வளர்ந்ததால் மலேசியா வாசுதேவன் ஆனார். மலேசிய இசை குழுவில் பாடி வந்த அவர் இளையராஜாவின் அண்ணன் நடத்திய பாவலர் இசை கக்சேரிகளிலும் பாடினார்.
அதன்பிறகு '16 வயதினிலே' படத்தில் இடம் பெற்ற 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' பாடல் மூலம் பின்னணி பாடகர் ஆனார். தமிழில் மட்டும் 8 ஆயிரம் பாடல்களும் பிற மொழிகளில் 4 ஆயிரம் பாடல்களும் பாடினார். 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
ஆனால் அவர் சில படங்களுக்கு இசை அமைக்கவும் செய்திருக்கிறார். உறவுகள், இதோ வருகிறேன், சாமந்தி பூ, பாக்கு வெற்றிலை, ஆயிரம் கைகள், ஆறாவது குறுக்கு தெரு, கொலுசு ஆகிய படங்களுக்கு இசை அமைத்துள்ளார். படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும், அவர் இசை அமைத்த பாடல்கள் வரவேற்பை பெறாததாலும் தனியாக இசை அமைப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டவில்லை.
53 days ago
53 days ago