புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால்
ADDED : 98 days ago
நல்லாட்சி மீடியா சார்பில் உருவாகும் படம் 'நல்லாட்சி'. இவருடன் சோனியா அகர்வால் இணைந்து நடிக்கிறார். மேலும், ஸ்ரீ தேவா ஜனனி, யோகப்ரியா, நளினி, வடிவுக்கரசி, அனுமோகன், லொள்ளுசபா சுவாமிநாதன் ஆகியோர் நடிக்கின்றனர். நித்யானந்தம் ஒளிப்பதிவு செய்கிறார், தேவா இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் யாவரும் கேளிர் கூறியதாவது: கதையின் நாயகன், தமிழ்நாட்டையும், இந்தியாவையும் உலகின் தலைசிறந்த செழிப்பான வல்லரசாக மாற்றுவதே தனது வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு பயணிக்கிறார். கதாநாயகன் தனது லட்சியத்தை எப்படி அடைகிறார் என்பதே படத்தின் கதை. சோனியா அகர்வால் இதுவரை நடித்திராத ஒரு கேரக்டரில் நடிக்கிறார் என்றார்.