இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது?
ADDED : 56 days ago
நடிகர் தனுஷ் தற்போது 'இட்லி கடை' எனும் படத்தை இயக்கி, நடித்துள்ளார் . ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன்,அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோரும் நடித்துள்ளனர். 'டான் பிக்சர்ஸ், வுண்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இதை தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.
இப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. சமீபத்தில் படத்திலிருந்து வெளியான 'என்ன சுகம்' பாடல் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகின்ற செப்டம்பர் மாதம் 13ம் தேதியன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.