மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
55 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
55 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
55 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
55 days ago
ஜெர்ரிஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனம் சார்பில் ஜெர்ரி தயாரிக்கும் படம் 'பேய்கதை'. ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இவருடன் வினோத், ஆர்யலட்சுமி, கானா பல்லவ், சுகன்யா, செல்வா, எலிசபெத் சுராஜ், மைக்கேல், ஸ்ரீசுமந்த், ஆஷிக் பீட்டர், ரோடஸ், ஜீவிதா, ருச்சி பிங்க்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . பிரவீண் எஸ். ஜி. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். வருகிற 29ம் தேதி வெளிவருகிறது.
இந்த படத்தின் மூலம் கன்னட நடிகை ஆஷ் மெலோவும், புதுமுகம் ஜீ.வி.மகாவும் அறிமுகமாகிறார்கள். இதுகுறித்து ஆஷ் மெலோ கூறும்போது கன்னடத்தில் துனியா விஜய் உடன் நடித்திருக்கிறேன். தமிழில் நான் நடித்திருக்கும் முதல் படம் இது. இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். தமிழ் ரசிகர்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
நடிகை ஜீ.வி.மகா கூறும்போது ''இந்தப் படத்தின் மூலமாகத்தான் நான் நடிகையாக அறிமுகமாகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநருக்கும் , படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் என்னுடைய நண்பராக இருந்தாலும் ஆடிஷன் வைத்து தான் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு என்னை தேர்வு செய்தார். அத்துடன் எனக்கு அவர் அளித்த ஊக்கம் காரணமாகவே இப்படத்தில் நடித்திருக்கிறேன்.
இந்த திரைப்படம் ஏனைய பேய் படங்களை போல் இல்லை, புதுமையான நாகரீகமான நல்லதொரு பேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கிறது'' என்றார்.
55 days ago
55 days ago
55 days ago
55 days ago