உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித்துடன் இணைந்த நரேன் கார்த்திகேயன்

அஜித்துடன் இணைந்த நரேன் கார்த்திகேயன்

அஜித் நடிப்புக்கு இணையாக கார் பந்தயத்திலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவ்வப்போது விபத்தில் சிக்கினாலும், கார் பந்தயம் மூலம் நாட்டிற்கு பெருமை சேர்க்க போராடி வருகிறார். 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த கார் பந்தய நிறுவனத்தை உருவாக்கி போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். வெளிநாடுகளில் பரிசுகளையும் பெற்று வருகிறார்.

இந்த நிலையில் மலேசியாவில் வருகின்ற டிசம்பர் மாதம் நடக்கவுள்ள 'ஆசிய லீ மான்ஸ் தொடர்' கார் ரேஸ் போட்டியில் அஜித் அணியுடன் இந்தியாவின் முதல் 'எப் 1' ரேஸ் வீரரான நரேன் கார்த்திகேயன் இணைந்துள்ளார். இந்த போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அஜித் அணி பங்கேற்கிறது.

நரேன் கார்த்திகேயன் இணைந்தது குறித்து அஜித் கூறுகையில், “எங்கள் அணியில் நரேன் இணைந்திருப்பது உண்மையிலேயே ஒரு பாக்கியம். அவருடன் இணைந்து போட்டியிடுவது ஒரு மரியாதை. மேலும் ஸ்பெஷலானது” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !