உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன்

மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன்

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் 'தி கோட்'. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது. ஆனாலும், வெங்கட் பிரபுவின் அடுத்த படம் இழுபறியில் இருந்தது. அவரை நீண்டகாலமாக காக்க வைத்த சிவகார்த்திகேயன் தற்போது அக்டோபர் மாதத்தில் இந்த படத்திற்கான கால்ஷீட் ஒதுக்கியதால் இதற்கான முன் தயாரிப்பு பணிகளை வெங்கட்பிரபு விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார்.

இந்த படமும் டைம் டிராவல் சம்மந்தப்பட்ட சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் தான் உருவாகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடித்தால் நன்றாக இருக்கும் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளதால் மிருணாள் தாக்கூர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !