உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா

மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா

தமிழில் உதயம் என்ற படத்தில் அறிமுகமானவர் பிரணிதா. தொடர்ந்து சகுனி, மாஸ், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என பல படங்களில் நடித்தார். 2021ல் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரணிதா இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவானார். அடுத்து மலையாளம், கன்னடத்தில் தலா ஒரு படத்தில் நடித்தவர் தற்போது மீண்டும் சினிமாவில் மறு பிரவேசத்தை தொடங்கி இருக்கிறார். அதற்காக சோசியல் மீடியாவில் தன்னுடைய புதிய புகைப்படங்களை பகிர்ந்து வரும் அவர், தனது தாய்மொழியான கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு இயக்குனர்களையும் சந்தித்து புதிய படவேட்டையில் தீவிரமடைந்திருக்கிறார். இதற்காக பிரணிதாவின் புதிய ஆல்பத்தை கோலிவுட்டில் சுற்றலில் விட்டு இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !