நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே
ADDED : 100 days ago
தெலுங்கில் பூஜா ஹெக்டே நடித்த பல படங்கள் அடுத்தடுத்து ஹிட் அடித்த நிலையில், ராதே ஷ்யாம், ஆச்சார்யா உள்ளிட்ட சில படங்கள் அவருக்கு அதிர்ச்சி தோல்வியாக அமைந்தன. அதையடுத்து தமிழில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கிய பூஜா ஹெக்டே, ரெட்ரோ படத்தில் நடித்தார். தொடர்ந்து கூலி (ஒரு பாடல் மட்டும்) ஜனநாயகன், காஞ்சனா 4 போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் 2022க்கு பிறகு தற்போது தெலுங்கில் நிதின் நடிக்கும் ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறார். விக்ரம் கே.குமார் இயக்கும் இந்த படத்திற்கு ஸ்வாரி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.