இயக்குனர் அவதாரம் எடுக்கும் கென் கருணாஸ்!
ADDED : 54 days ago
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் 'அசுரன், விடுதலை 2, வாத்தி' ஆகிய படங்களில் நடிகராக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் கென் கருணாஸ். அவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்தை கருணாஸ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை கென் மேற்கொண்டு வருகிறார். இவர் ஏற்கனவே 'திருச்சிற்றம்பலம்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.