கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி'
ADDED : 98 days ago
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள படம் 'கூலி'. இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதியன்று திரைக்கு வருவதை முன்னிட்டு நேற்று காலை நேரத்தில் 'கூலி' படத்தின் டிக்கெட் முன்பதிவு கேரளா மாநிலத்தில் தொடங்கினர்.
நேற்று காலையில் இருந்து இரவு நேரம் வரைக்கும் கூலி படம் டிக்கெட் முன்பதிவில் மட்டும் சுமார் ரூ.4.11 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் 'எம்புரான்' மற்றும் 'லியோ' ஆகிய படங்களுக்கு அடுத்த இடத்தில் டிக்கெட் முன்பதிவில் கூலி படம் இடம்பெற்றுள்ளது. 'சிவாஜி, எந்திரன்' போன்ற படங்களுக்கு பிறகு கேரளாவில் ரஜினி படங்களுக்கு டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைபெறுவது கூலி படத்திற்கு தான் நிகழ்ந்துள்ளது என விநியோக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.