உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே!

காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே!


இந்திய சினிமாவில் முன்னணி பாடகியாக இருந்தவர் ஆஷா போஸ்லே. இவரது பேத்தி ஜனாய் போஸ்லே. படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் தனது பிறந்த நாளை கொண்டாடிய போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கிரிக்கெட் வீரர் முகமது சிராஜும் இடம் பெற்றிருந்தார். அதை அடுத்த சோசியல் மீடியாவில் ஜனாய் போஸ்லே - முகமது சிராஜ் ஆகிய இருவரும் காதலித்து வருவதாக கிசு கிசுக்கள் பரவத் தொடங்கியது.

அதையடுத்து முகமது சிராஜ் எனது அண்ணன் போன்றவர் என்று இணையப்பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் ஜனாய் போஸ்லே. என்றாலும் தொடர்ந்து அந்த காதல் கிசுகிசு பரவி வந்தது. அதனால் ரக்ஷா பந்தன் அன்று முகமது சிராஜின் கையில் ராக்கி கட்டி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, அவர் எனது அண்ணன், தவறான செய்தி பரப்பாதீர்கள் என்று மீண்டும் பதிவிட்டுள்ளார் ஜனாய் போஸ்லே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

SANKAR
2025-08-10 20:04:26

Sridevi also tied Rakhee to Kapoor...not once but TWICE!