''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித்
ADDED : 143 days ago
'குட் பேட் அக்லி' படத்தை அடுத்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் தனது 64வது படத்தில் நடிக்கப் போகிறார் அஜித்குமார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக கார் பந்தயங்களில் பங்கேற்று வரும் அஜித் குமார், லட்சுமி விரதத்தை முன்னிட்டு சென்னை வந்திருந்தார். அப்போது சாமி தரிசனம் செய்துவிட்டு தாம்பூலத்தில் திருநீரை எடுத்து தனது மனைவி ஷாலினியின் நெற்றியில் வைத்து விடுகிறார் அஜித்குமார்.
அதையடுத்து அவர் அஜித்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகிறார். அப்போது அவரை தூக்கி விட்டபடி, தன்னருகில் நிற்பவர்களை பார்த்து, ''வீட்ல போய் நான் காலில் விழணும்'' என்று சிரித்தபடியே ஒரு கமெண்ட் கொடுத்துள்ளார் அஜித். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.