உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது!

'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது!


ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன. அப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். எஸ். எஸ். கீரவாணி இசையமைத்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து 'பாகுபலி தி எபிக்' என்ற படத்தை நீண்ட ரன்னிங் டைம் மற்றும் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் இடம் பெறாத மேலும் பல முக்கிய காட்சிகளையும் இணைத்து அக்டோபர் 31ம் தேதி பல மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் டீசர் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக இருப்பதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. இதே நாளில் 'வார்-2' மற்றும் 'கூலி' படங்கள் திரைக்கு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !