மேலும் செய்திகள்
250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி'
49 days ago
அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2!
49 days ago
தற்போது இந்திய நடிகர்கள் ஹாலிவுட்டில் நடிப்பது சர்வசாதரணமாகி விட்டது. ஆனால் 70 ஆண்டுகளுக்கு முன்பே நம்பியார் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.
'தி ஜங்கிள்' என்ற அந்தப் படம் 1952ம் ஆண்டு வெளிவந்தது. வில்லியம் பெர்கே இயக்கிய இந்த படத்தில் ரோட் கேமரன், சீசர் ரோமியோ, மினி வின்ஸ்டர் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை இந்திய காடுகளில் நடப்பதால் இதன் படப்பிடிப்புகள் இந்தியாவில் நடந்தது. அதில் இந்திய கேரக்டர்களும் இடம் பிடித்தது.
இதில் மலைவாழ் பழங்குடிகளின் தலைவராக எம்.என்.நம்பியார் நடித்தார். அவருடன் சுலோச்சனா, ராமகிருஷ்ணன், சித்ராதேவி என்ற தமிழ் நடிகர்களும் நடித்தனர். டேவிட் ஆப்ரஹாம் என்பவர் இந்திய பிரதமராக நடித்தார். அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனம் இதை தயாரித்தது. தமிழிலும் 'காடு' என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்பட்டது.
49 days ago
49 days ago