உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய், அஜித்துக்கு வாழ்த்து, ரஜினிக்கு பாராட்டு : 30 ஆண்டை தொட்ட சிம்ரன் பேட்டி

விஜய், அஜித்துக்கு வாழ்த்து, ரஜினிக்கு பாராட்டு : 30 ஆண்டை தொட்ட சிம்ரன் பேட்டி

சென்னையில் நடந்த விழாவில் டூரிஸ்ட் பேமிலி படத்தின் 100வது நாள் விழாவை கணவருடன் கேக் வெட்டி கொண்டாடினார் நடிகர் சிம்ரன். பின்னர் அவர் அளித்த பேட்டி: ‛‛சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. நடிப்பு, டான்ஸ், உடலை தக்க வைப்பது சாதாரணமான விஷயமல்ல. இப்போதும் குட் பேட் அக்லி, அந்தகன், டூரிஸ்ட் பேமிலி என நல்ல படங்களில் இருப்பது சந்தோசம். நான் ஹீரோயினாக மட்டுமல்ல, வில்லியாக நடித்த படங்களையும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். நட்புக்காக, பார்த்தேன் ரசித்தேன் தொடங்கி அந்தகன் வரை அது தொடர்கிறது. குறிப்பாக, அந்தகனில் நான் நடித்த கேரக்டர் என் மனசுக்கு நெருக்கமானது. நான் லக்கியாக உணர்கிறேன்.

இப்போது நாம் செல்போனில் முழ்கிவிட்டோம். குடும்பத்துக்கு நேரம் செலவழியுங்கள். குடும்ப உறவுகளை மதியுங்கள், அவர்களுடன் மனம் விட்டு பேசுங்கள் என்று சொல்கிறது டூரிஸ்ட் பேமிலி. அந்த படம் 100 நாட்களை கடந்தது மகிழ்ச்சி. எனக்கும் தேசிய விருது வாங்கும் ஆசை இருக்கிறது. அது விரைவில் நடக்கலாம். ஜோடி படத்தில் என்னுடன் தனது திரையுலக பயணத்தை தொடங்கியவர் திரிஷா. அவர் டூரிஸ்ட் பேமிலியை பாராட்டியது மகிழ்ச்சி. அவரும் விஜய், அஜித், மணிரத்னம் படங்கள் என சிறப்பாக செயல்படுகிறார்.

எனக்கு ரோல் மாடல் ஸ்ரீதேவி தான். அப்புறம், என் அம்மா. விஜய் இப்போது அரசியலுக்கு செல்கிறார். அஜித் கார் ரேசில் ஆர்வமாக இருக்கிறார். இரண்டு பேருக்கும் வாழ்த்துகள். பேட்ட படத்தில் நான் ரஜினி சாருடன் நடித்தேன். செட்டில் ஓரமாக அமர்ந்து அவர் செயல்பாடுகளை ரசிப்பேன். எவ்வளவு எளிமையான, நல்ல மனிதர். கூலி படக்குழுவுக்கு வாழ்த்துகள், அந்த படத்தை நான் சென்னையில் தான் பார்ப்பேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !