உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பிளாக் கோல்டில்' நிழல் உலக மாபியாக்களின் கதை

'பிளாக் கோல்டில்' நிழல் உலக மாபியாக்களின் கதை


எம்.எம்.ஸ்டுடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரிக்கும் படம் 'பிளாக் கோல்ட்'. தீரன் அருண்குமார் இயக்குகிறார். வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, ஏ.வெங்கடேஷ், அருள் டி சங்கர், விஜய் டிவி ராமர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சந்தோஷ்குமார் வீராசாமி ஒளிப்பதிவு செய்கிறார், கவாஸ்கர் அவினாஷ் இசை அமைக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் தீரன் அருண்குமார் கூறியதாவது: ஒரு படித்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன் தன் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு இழப்பிற்கு பதில் தேடி எந்த அளவிற்கு துணிகிறான் என்பதே இப்படத்தின் கதைக்கரு. நம் வாழ்வில் சாதாரணமாக இருக்கும் சிறு விஷயம் ஒன்று, எப்படி உலக வர்த்தகமாகி இருக்கிறது, அதன் பின்னணியில் இருக்கும் நிழல் உலக மாபியாக்கள் பற்றி கூறும் இப்படம் பரபரப்பான திரைக்கதையில் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாகி உள்ளது. ஒரு சாதாரண நடுத்தர இளைஞனுக்கும் மிகப்பெரிய வணிக மாபியாக்களுக்கும் இடையே நடக்கும் அனல் தெறிக்கும் உண்மை சம்பவங்களை சொல்லும் படம். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !