உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி

மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகிபாபு நடிப்பில் வெளியான படம் தலைவன் தலைவி. இதற்கு முன்பு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் படம் தோல்வி அடைந்ததால் இந்த படம் எப்படிப்பட்ட வரவேற்பை பெறப்போகிறதோ என்று அப்படக்குழு பதட்டத்தில் இருந்தது. ஆனால் திரைக்கு வந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்ற தலைவன் தலைவி படம் நல்ல வசூலை கொடுத்துள்ளது.

இந்த நிலையில், இப்படம் வெளியாகி 16 நாட்களில் இதுவரை 89 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது. இப்போதும் தியேட்டர்களில் ஓரளவு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருவதால் இந்த படம் இன்னும் சில நாட்களில் 100 கோடி வசூலை எட்டிப் பிடித்து விடும் என்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில், நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான மகாராஜா படத்தை தொடர்ந்து இந்த தலைவன் தலைவி படமும் 100 கோடி வசூல் கிளப்பில் இணையப் போகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !