கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா?
ADDED : 51 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படத்தில் ஹிந்தி நடிகர் அமீர்கான் ஒரு கெஸ்ட் ரோலிலும், பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ஆனால் இந்த படத்தில் சிறுவயது ரஜினியாக சிவகார்த்திகேயன் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது, கமல்ஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற ஒரு கெஸ்ட் ரோலில் சூர்யா நடித்திருந்தார். அதேப்போல் இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. கூலி படக்குழு இது குறித்த எந்த ஒரு தகவலும் வெளியிடாத போதும், இப்படி ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது ஆகஸ்ட் 14 ஆம் தேதி தான் தெரியவரும்.