மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
50 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
50 days ago
ஒவ்வொரு முறையும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, முந்தைய சாதனை ஒன்றை முறியடிப்பார்களா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பது வழக்கம். தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களகாவே 'கூலி, கூலி' என எங்கு பார்த்தாலும் கூவிக் கொண்டிருக்கிறார்கள்.
படத்தின் ஆன்லைன் முன்பதிவு, அமெரிக்க முன்பதிவு ஆகியவை இதுவரை இல்லாத அளவிற்கு வரவேற்பு பெற்றிருப்பதே அதற்குக் காரணம். முதல் நாள் வசூலில் 'கூலி' படம் புதிய சாதனை படைக்குமா என்று எதிர்பார்க்கிறார்கள்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த படமாக விஜய் நடித்த 'லியோ' படம் 148.5 கோடியுடன் முதலிடத்தில் இருக்கிறது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒன்று. மொத்த வசூலில் ரஜினிகாந்த் நடித்த '2.0' படம் 800 கோடி வசூலில் உள்ளது. ஆனால், இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
தெலுங்கு, கன்னடம், ஹிந்தி சினிமாக்கள் கூட 1000 கோடி வசூலைப் பெற்றுவிட்டது. இருந்தாலும் எந்த ஒரு தமிழ்ப் படமும் இதுவரை அந்த சாதனையைப் படைக்கவில்லை என்ற வருத்தம் இங்குள்ளது. இதனிடையே, முதல் நாள் வசூலில் 'லியோ' பட வசூலை 'கூலி' பட வசூல் முறியடிக்கும், அதோடு, '2.0' படத்தின் மொத்த வசூலையும் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அளவில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்து 'புஷ்பா 2' படம் 294 கோடிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் 223 கோடிகளுடன் 'ஆர்ஆர்ஆர்', மூன்றாவது இடத்தில் 215 கோடிகளுடன் 'பாகுபலி 2' , நான்காவது இடத்தில் 191 கோடிகளுடன் 'கல்கி 2898 எடி' ஆகிய தெலுங்குப் படங்கள்தான் உள்ளன.
50 days ago
50 days ago