உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா?

கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி இல்லை என்று கூறப்படுகிறது. படத்தில் ஸ்ருதிஹாசன் இருக்கிறார். அவர் சத்யராஜ் மகளாக வருகிறார். அது குணசித்திர கேரக்டர், பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். மற்றபடி, ரஜினிக்கு ஜோடி இருப்பதாக தெரியவில்லை. பொதுவாக தனது படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதை எழுதுவார் லோகேஷ். அவர் இயக்கிய மாநகரம், கைதி, விக்ரம் படங்களில் அப்படிதான். மாஸ்டர், லியோவில் மட்டும் விஜய் இமேஜ், பிஸினஸ்க்காக ஹீரோயினை கொண்டு வந்தார். அவர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கிடையாது.

லோகேஸை பொறுத்தவரையில் வன்முறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். ரஜினி படம் என்பதால் இதில் வன்முறையை குறைக்கவில்லை என ஒரு பேட்டியில் ஓபனாக சொல்லிவிட்டார். ஆனால், ரஜினி படத்தை படத்தை குழந்தைகள், குடும்பத்தினர் என அனைத்து தரப்பும் விரும்பி பார்ப்பார்கள். இதில் வன்முறை அதிகம், ஏ சான்றிதழ் வேறு, ரஜினிக்கு ஜோடியும் கிடையாது என்பதால் கூலி படத்தின் மீதான ஈர்ப்புதன்மை குறைகிறது என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !