மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
48 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
48 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
48 days ago
இந்தியத் திரையுலகத்தில் நாளை இரண்டு படங்கள் மோதிக் கொள்ள உள்ளன. ஒன்று ஹிந்தியில் உருவான 'வார் 2', மற்றொன்று தமிழில் உருவான 'கூலி'. இரண்டு படங்களுமே பெரிய பட்ஜெட் படங்கள், இரண்டு படங்களிலும் மல்டி ஸ்டார்கள் நடித்துள்ளார்கள்.
இந்தப் படங்களின் ஆந்திரா, தெலங்கானா முன்பதிவுகளும் நேற்று இரவு முதல் ஆரம்பமாகி தற்போது மொத்தமாக முன்பதிவு நடந்து வருகிறது. டிக்கெட்டை முன்பதிவு செய்யும் ஆன்லைன் இணையதளங்களில் ரசிகர்கள் ஒரு வித்தியாசத்தைப் பார்க்கலாம்.
'வார் 2' படத்திற்கான முன்பதிவு பக்கத்தில், “2டி, ஐமேக்ஸ் 2டி, 4டி எக்ஸ், டால்பி சினிமா 2டி, ஐஸ்' என விதவிதமான திரையீடு தொழில்நுட்பங்களில் இந்தப் படத்தைப் பார்க்கும் வசதிகளுடன் முன்பதிவு நடைபெறுகிறது. ஆனால், 'கூலி' படத்திற்கான முன்பதிவு பக்கத்தில், வெறும் “2டி' வடிவில் மட்டுமே படத்தைப் பார்க்கும் வசதியுடன் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
'வார் 2' படம் '2டி' தவிர மற்ற தொழில்நுட்ப திரையீடுகளில் 'எக்ஸ்க்ளூசிவ் ஒப்பந்தம்' ஒன்றைப் போட்டுள்ளது. வேறு எந்த படத்தையும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மேலே குறிப்பிட்ட மற்ற வடிவங்களில் திரையிடக் கூடாது என்பதுதான் அந்த ஒப்பந்தம்.
இது வியாபார ரீதியாக 'தனிப்பட்ட ஒப்பந்தம்' என்று சொன்னாலும் போட்டி நிறைந்த சினிமா உலகத்தில் ஒருவர் மட்டுமே 'ஏகபோகம்' ஒப்பந்தம் செய்வதை கேள்வி எழுப்பும் ஒரு ஒப்பந்தம் ஆகும்.
இதனால், 'கூலி' படத்தை '2 டி' தவிர 'ஐமேக்ஸ், 4 டிஎக்ஸ், டால்பி சினிமா' உள்ளிட்ட வடிவங்களில் ரசிகர்கள் இரண்டு வாரங்களுக்குப் பார்ப்பதைத் தடுக்கிறது. இது குறித்து தமிழ்த் திரைப்படத் துறையினர் எந்த ஒரு எதிர்ப்பையும் பதிவு செய்யாமல் இருப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.
48 days ago
48 days ago
48 days ago