‛சக்தித்திருமகன்' ரிலீஸ் தேதி மாற்றம்
தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடிப்பவர், அடிக்கடி படங்களை ரிலீஸ் செய்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. அவர் நடித்த படங்கள் ஓடுகிறதோ இல்லையோ, அந்த படங்கள் லாபத்தை சம்பாதிக்கிறதோ இல்லையோ, அவருக்கான தயாரிப்பாளர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். அவரே படங்களை தயாரிக்கவும் செய்கிறார்.
விஜய் ஆண்டனி நடித்த மார்கன் பெரிய ஹிட் ஆகவில்லை என்றாலும் ஓரளவு வரவேற்பை பெற்றது. அடுத்த சில மாதங்களில் அவர் நடித்த சக்தித்திருமகன் ரிலீஸ் என அறிவித்தார்கள். ‛அருவி' அருண் பிரபு இயக்கிய அந்த படம், செப்டம்பர் 5ல் ரிலீஸ் என்றார்கள். இப்போது ரிலீஸ் தேதியில் சின்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 19ல் சக்தித்திருமகன் ரிலீஸ் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசியல் பின்னணி உடைய கதையாக சக்தித்திருமகன் உருவாகி உள்ளது. இந்த படத்துக்குபின், சசி இயக்கத்தில் தான் நடிக்கும் பிச்சைக்காரன் 2வில் கவனம் செலுத்துகிறார் விஜய் ஆண்டனி.